சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்கணும்; ஆசியான் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்கணும்; ஆசியான் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 11:55 AM

புதுடில்லி: 'சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா பேச்சுவார்த்தையை விரும்புகிறது. சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என ஆசியான் மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
நம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 'ஆசியான்' மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு சென்றுள்ளார். அங்கு இன்று (நவ.,21) ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: எல்லை தகராறுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற உலகளாவிய சவால்களை அணுகுவதில் அமைதியான பேச்சுவார்த்தையை இந்தியா விரும்புகிறது.
சர்வதேச சட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும். அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாடுகள் பரஸ்பரம் கருத்துகளை மதிக்கும் போது மட்டுமே, உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வுகளை அடைய முடியும் என இந்தியா நம்புகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதியை மேம்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

