தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/தேர்தலில் போட்டியிட வயது வரம்பு அதிகரிப்பு

தேர்தலில் போட்டியிட வயது வரம்பு அதிகரிப்பு

தேர்தலில் போட்டியிட வயது வரம்பு அதிகரிப்பு


ADDED : பிப் 14, 2024 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவோர் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் அதிகரிக்க, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பொதுக்குழுவில், தீர்மானம் நிறைவேறியது.

இதுகுறித்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்கலை பொதுக்குழுக் கூட்டம், நேற்று முன் தினம் நடந்தது. மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடுவோர் வயது வரம்பை, இரண்டு ஆண்டுகள் அதிகரிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.

கடந்த 2019- - 2020ம் ஆண்டுக்குப் பின், கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பல்கலை மாணவர் சங்க தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே, லிங்டோ கமிட்டி பரிந்துரைப்படி, வயது வரம்பைத் தாண்டிய மாணவர்கள், மாணவர் சங்கத் தேர்தல்களில் பங்கேற்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இனி, இளங்கலை மாணவர்கள், 17 முதல் 22 வயது வரையிலும், முதுகலை மாணவர்கள் 25 வயது வரையிலும், பி.எச்டி., மாணவர்கள் 30 வயது வரையிலும், பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us