தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ வழிகாட்டுதல் அவசியம்!

வழிகாட்டுதல் அவசியம்!

வழிகாட்டுதல் அவசியம்!


ADDED : பிப் 14, 2026 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 11:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மேற்கு வங்க அரசின் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனை முறையாக செயல்பட வைக்க, உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் அவசியம். எனவே, உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்.

சிதம்பரம் மூத்த தலைவர், காங்.,

ஏமாற்றும் மம்தா!


மேற்கு வங்க இளைஞர்களை, முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., அரசு ஏமாற்றி வருகிறது. மாநிலத்தில் தற்போது, 2.15 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

சுவேந்து அதிகாரி மூத்த தலைவர், பா.ஜ.,

முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல!


மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யாமல், வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே திரிணமுல் காங்., பார்க்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும்.

சமிக் பட்டாச்சார்யா மேற்கு வங்க பா.ஜ., தலைவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us