ADDED : டிச 14, 2024 04:07 AM
பெலகாவி: ''கர்நாடகாவில் முன்னாள் தேவதாசிகளுக்கும் கூட, கிரஹலட்சுமி திட்டத்தின் பலன் கிடைக்கிறது.
சலுகை கிடைக்கவில்லையென, யாரும் புகார் அளிக்கவில்லை,'' என மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ஹேமலதா நாயக்கின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:
மாநிலத்தில் முன்னாள் தேவதாசிகளுக்கும், கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது. அவர்களுக்கும், வீட்டு வசதி திட்டத்தின் கீழ், குடியிருப்பு வசதி செய்யப்படுகிறது. தங்களுக்கு சலுகை கிடைக்கவில்லை என, யாரும் புகார் அளிக்கவில்லை.
கொப்பால் மாவட்டத்தில், 2,653 முன்னாள் தேவதாசிகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. மற்றொரு முறை ஆய்வு செய்து, சலுகைகள் வழங்கப்படும். மிகவும் அவலமான தேவதாசி நடைமுறையை வேருடன்அழிக்க, நாங்கள்முயற்சிக்கிறோம்.
இவ்வாறு அவர்கூறினார்.

