தொகுதிக்கு போங்க; எம்.எல்.ஏ.,க்களுக்கு கெஜ்ரிவால் அறிவுறுத்தியதாக மனைவி தகவல்
தொகுதிக்கு போங்க; எம்.எல்.ஏ.,க்களுக்கு கெஜ்ரிவால் அறிவுறுத்தியதாக மனைவி தகவல்
UPDATED : ஏப் 04, 2024 12:43 PM
ADDED : ஏப் 04, 2024 12:30 PM

புதுடில்லி: எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிக்கு சென்று மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளதாக, அவரது மனைவி தெரிவித்தார்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கும், கட்சியினருக்கும் செய்தி அனுப்பி வருகிறார்.
அந்த வகையில், சுனிதா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியுள்ளதாவது; கெஜ்ரிவால் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் செய்தி அனுப்பி உள்ளார். நான் சிறையில் உள்ளதால், டில்லி மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டும். இவ்வாறு சுனிதா கூறினார்.

