ADDED : மே 03, 2025 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ரோஹிணி ஜப்பானிய பூங்காவில் நேற்று காலை மரத்தில் தூக்கிட்டு தொங்கிய சிறுமி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
காலை 6:45 மணிக்கு நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், பிரசாந்த் விஹார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், துப்பட்டாவில் தூக்கிட்டு தொங்கிய சிறுமி உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது செருப்புகள் மரம் அருகே கிடந்தன.
காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை போலீசார் சரிபார்த்து வருகின்றனர். அந்தச் சிறுமி யார் என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

