ADDED : ஏப் 02, 2025 03:51 AM

சர்வதேச சந்தையில் உரம் விலைகள் ஏறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த சுமையை விவசாயிகள் மீது விழாமல் பார்த்துக்கொள்ள மோடி அரசு உறுதி எடுத்துள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 1.77 லட்சம் கோடி ரூபாயை உர மானியமாக ஒதுக்கி உள்ளோம். விவசாயிகள் நலன் என்பது எங்களின் மரபணுவிலேயே உள்ளது.
- சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
கணக்கெடுப்பு தாமதம் ஏன்?
கடந்த, 1881 முதல் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. போர், பெரிய நெருக்கடிகள் இருந்தாலும் நடந்தது. ஆனால் இப்போது முதல் முறையாக வரலாற்றில் இல்லாத தாமதத்தை பா.ஜ., அரசு உருவாக்கி உள்ளது.
- மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்.
ஏழை முஸ்லிம்களின் கனவு!
வக்ப் திருத்த மசோதா ஏழை முஸ்லிம்களின் கனவை நனவாக்கும். இந்த மசோதா வக்ப் வாரியத்தில் நடக்கும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டு வரும். அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வீடு ஆகிய அடிப்படை தேவைகளுக்கான விரிவான திட்டம்தான் இந்த மசோதா.
தினேஷ் சர்மா
ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,

