பிப். 29-ல் பா.ஜ., முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பிப். 29-ல் பா.ஜ., முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ADDED : பிப் 24, 2024 06:30 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலையொட்டி 120 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ..,வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்லிமென்ட் லோக்சபாவிற்கு தேர்தல் தேதியை இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
இதையடுத்து ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இத்தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வெற்றி வியூகம் வகுத்து வருகிறது. பிரதமர் மோடி 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இன்று பா.ஜ. வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதற்கட்டமாக 100-120 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வரும் 29-ம் தேதி வெளியிடுவதாகவும், அதில் தமிழகத்தில் நெல்லை தொகுதி வேட்பாளரின் பெயரும் இடம் பெறக்கூடும் என தெரிகிறது.
முன்னதாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா புதுடில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ரத யாத்திரையை துவக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

