காஷ்மீரில் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு
காஷ்மீரில் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு
UPDATED : ஏப் 09, 2025 05:10 PM
ADDED : ஏப் 09, 2025 03:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் நடைபெறும் என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
என்கவுன்டர் குறித்து ராம்நகர் போலீசார் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம், ராம்நகர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியான ஜோபர் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பலத்த துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

