ADDED : ஜூன் 10, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி அரசு பள்ளிகளில் கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்திற்கு, டில்லி மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
டில்லி மாநில முதல்வர் ரேகா குப்தா தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி கல்வி அமைச்சர் அதிஷி சூத், நிருபர்களிடம் கூறியதாவது:
கல்வி கட்டணங்களை சில தனியார் கல்வி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதை கட்டுப்படுத்த, மாநில அரசின் அமைச்சரவை கூட்டத்தில், அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த அவசர சட்டம், துணை நிலை கவர்னரின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ள பெற்றோருக்கு இன்று இனிய நாள். விரைவில் இந்த அவசர சட்டம், சட்டமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

