'பொருளாதார நடைமுறைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்': 'பிரிக்ஸ்' மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
'பொருளாதார நடைமுறைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்': 'பிரிக்ஸ்' மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ADDED : செப் 09, 2025 06:47 AM

புதுடில்லி: “உலகளாவிய நிச்சயமற்ற சூ ழலில், பொருளாதார நடைமுறைகள், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், அனைவருக்கும் பயனளிக்கும் விதத்திலும் இருக்க வேண்டும்,” என, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்திஉள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார்.
இதேபோல், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அவர் 50 சதவீத வரி விதித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, 'பிரிக்ஸ்' அமைப்பில் இடம்பெற்றுள்ள பிரேசில், பிரிக்ஸ் அமைப்பின் மாநாடுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அந்நா ட்டு அதிபர் லுலா டா சில்வா தலைமையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலா க பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
உலகம் ஒரு கூட்டாக, வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான ஒரு கணிக்கக் கூடிய நிலையான சூழலை தேடுகிறது.
அதே நேரத்தில், பொருளாதார நடைமுறைகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவருக்கும் பயனளிக்கும் விதத்திலும் இருப்பது அவசியம்.
பல இடையூறுகள் இருக்கும்போது, அனைத்து குறைபாடுகளுக்கும் எதிராக அதை நிரூபிப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் தயாரிப்புகளை ஜனநாயகப்படுத்துவதும் அவசியம். உலகின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்குரியது.
கொரோனா தொற்று, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிகழும் மோதல்கள், வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஏற்படும் ஏற்றம் - இறக்கம், தீவிர காலநிலை நிகழ்வுகள் போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஒட்டுமொத்த கவலைகள் குறித்தும் பிரிக்ஸ் உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜின்பிங் பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேசுகையில், “அமெரிக்காவால் முன்வைக்கப்படும் வர்த்தக சவால்களுக்கு 'பிரிக்ஸ்' நாடுகள் ஒன்றுபட்ட பதிலடி கொடுக்க வேண்டும்.
''சில நாடு கள் நடத்தும் வரிப் போர் உலகப் பொருளாதாரத்தை கடுமையாக சீர்குலைத்து, சர்வதேச வர்த்தக விதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. வர்த்தக அமைப்பை பாதுகாக்க பிரிக்ஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம்,” என்றார்.