அசல் ஹேமந்த் சோரனுடன் நகல் ஹேமந்த் சோரன் சந்திப்பு
அசல் ஹேமந்த் சோரனுடன் நகல் ஹேமந்த் சோரன் சந்திப்பு
ADDED : செப் 27, 2024 03:07 AM

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை போன்ற தோற்றமுடைய இளைஞர் நேற்று ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று தனது ‛எக்ஸ்' தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றினார். அது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அச்சு அசலாக ஹேமந்த் சோரனை போன்று தோற்றமுடைய ஒரு இளைஞர் இருந்தார்.
இது தொடர்பாக வெளியான செய்தியில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ஹாத்தியா நகரைச் சேர்ந்த முன்னா லோஹரா என்ற நாடக நடிகர் தான் புகைப்படத்தில் உள்ள இளைஞர் என்பதும் தெரியவந்தது.அந்த இளைஞர் அச்சு அசலாக ஹேமந்த் சோரனை போன்றே இருந்தார்.
முன்னதாக இவரை பற்றி அறிந்த முதல்வர் ஹேமந்த் சோரன் அவரை தனது இல்லத்திற்கு வரவழைத்தார். இதையடுத்து முன்னா லோஹரா இன்று தனது குடும்பத்துடன் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

