ரூ.80 ஆயிரம் கோடியில் பாதுகாப்பு உபகரணங்கள்; மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடிவு
ரூ.80 ஆயிரம் கோடியில் பாதுகாப்பு உபகரணங்கள்; மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடிவு
ADDED : டிச 26, 2025 02:29 PM

புதுடில்லி: பாதுகாப்புத்துறைக்கு ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு படைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் டிஏசி எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த வாரத்திற்கு கூட்டத்தை ஒத்திவைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டின் கடைசி பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் என்பதால், முக்கிய ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களின் அவசர கொள்முதல் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

