sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாசிலிருந்து யமுனை நதியை மீட்டெடுக்க...ஆலோசனை : பிரதமர் மோடி தலைமையில் தீவிர பேச்சு

/

மாசிலிருந்து யமுனை நதியை மீட்டெடுக்க...ஆலோசனை : பிரதமர் மோடி தலைமையில் தீவிர பேச்சு

மாசிலிருந்து யமுனை நதியை மீட்டெடுக்க...ஆலோசனை : பிரதமர் மோடி தலைமையில் தீவிர பேச்சு

மாசிலிருந்து யமுனை நதியை மீட்டெடுக்க...ஆலோசனை : பிரதமர் மோடி தலைமையில் தீவிர பேச்சு


ADDED : ஏப் 17, 2025 09:42 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மாசுபாட்டிலிருந்து யமுனை நதியை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசு 3,140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நதியை மீட்டெடுப்பது குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது.

யமுனை நதியை சுத்தப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றாதது, வாக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இதை பா.ஜ.,வும் முக்கிய அஸ்திரமாக பயன்படுத்திக் கொண்டது. தேர்தல் வாக்குறுதியாக பா.ஜ.,வும் யமுனை துாய்மைப்படுத்துவதை அறிவித்திருந்தது. அதனால் யமுனை துாய்மைப்படுத்தும் பணிகளை புதிய அரசு முன்னெடுத்துச் செல்கிறது.

முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பதவியேற்றது முதலே, யமுனை நதியின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

நேற்று முன்தினம் முதல்வர் தலைமையில் நடந்த செலவு நிதிக் குழுவின் முதல் கூட்டத்தில் யமுனை நதி சுத்தம் செய்யும் பணிகளுக்கு 3,140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியைக் கொண்டு, புதிதாக 27 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவதற்கும் கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் வடிகால் சுத்திகரிப்பு, கழிவுநீர் வலையமைப்பு விரிவாக்கம், நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல கட்ட செயல்பாடுகள் அடங்கும்.

யமுனை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக வாஜித்பூர் தக்ரான், முன்ட்கா, நரேலா, பவானா, அவுச்சாண்டி, தாஜ்பூர் குர்த், கஞ்சவாலா, மஜ்ரி, கெவ்டா கிராமம், ஜவுனாபூர், பிஜ்வாசன், சலாபூர், பஞ்சாப் கோர், குதுப்கர், திக்ரி கலன், முகமதுபூர் மஜ்ரி, நிஜாம்பூர், ஜவுந்தி, பவானா உள்ளிட்ட இடங்களில் 18 மாதங்களுக்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவதன் வாயிலாக, நகரின் நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் துர்நாற்றம் குறையும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகளுக்கும் காலக்கெடுவை நிர்ணயித்து, சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யமுனை நதியை மீட்டெடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். பிரதமர் தலைமையில் யமுனை புனரமைப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் நடந்தது.

பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ரேகா குப்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் யமுனை நதியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நதியை சுத்திகரிப்பது, மீட்டெடுப்பது குறித்த தற்போதைய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நதியை சுத்தம் செய்வதற்கான துறை வாரியான செயல் திட்டம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பின் தற்போதைய நிலை மற்றும் யமுனை நதியின் தரத்தை பாதிக்கும் நிர்வாக சிக்கல்கள் குறித்த அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

சாத் பூஜை கொண்டாடும்போது டில்லி மக்களின் அனுபவம் மேம்படும் வகையில் நதிக்கு மரியாதை அளிக்கவும், நதியை மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவும் மக்கள் - நதி இணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

யமுனை நதி புனரமைப்புக்காக தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல், நதியைச் சுற்றி பொது நிகழ்வுகளை நடத்துதல் ஆகியவற்றுக்கான மக்கள் பங்கேற்பு இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பெரிதும் மாசுபட்ட நதியை மீட்டெடுக்கும் பணியில் பொதுமக்களை ஈடுபடுத்துவது, விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

யமுனை உயிர்நாடி

யமுனை நதி, டில்லியின் உயிர்நாடி. அதன் சுத்தம் மற்றும் பாதுகாப்பு அரசு முன்னுரிமை அளிக்கும். யமுனை புத்துயிர் பெறுதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் இலக்கு மட்டுமல்ல. எதிர்கால சந்ததியினருக்கான ஒரு பொறுப்பு, இது தீவிரத்தன்மையுடனும் அவசரத்துடனும் மேற்கொள்ளப்படுகிறது.

ரேகா குப்தா

முதல்வர்






      Dinamalar
      Follow us