காங்., ஐ ‛ பினிஷ் ' செய்யும் வரை ராகுல் ஓயமாட்டார்: ராஜ்நாத்
காங்., ஐ ‛ பினிஷ் ' செய்யும் வரை ராகுல் ஓயமாட்டார்: ராஜ்நாத்
ADDED : ஏப் 07, 2024 11:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ‛‛காங்கிரசை மொத்தமாக ‛பினிஷ்'( முடிக்கும்) வரை ராகுல் ஓய மாட்டார்'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ம.பி., மாநிலம் ஸித்தி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் பேசியதாவது: கிரிக்கெட்டுக்கு தோனி ‛பெஸ்ட் பினிஷர்' ஆக உள்ளார். அரசியலில் ‛பெஸ்ட் பினிஷர்' யார் என்று என்னிடம் கேட்டால் நான் ராகுலை தான் சொல்வேன். இதன் காரணமாகத் தான் பல தலைவர்கள் காங்., கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
காங்., கட்சியை மொத்தமாக பினிஷ் செய்யும் வரை ராகுல் ஓய மாட்டார். காங்கிரசுக்கும் ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அக்கட்சி ஆட்சி செய்த போது முறைகேடு புகார்கள் எழுந்தன. ஆனால், பிரதமர் மோடி ஆட்சி மீது எந்த புகாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

