அயோத்தி ராமர் கோயிலில் யோகி ஆதித்யநாத்; அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்களுடன் சென்றார்
அயோத்தி ராமர் கோயிலில் யோகி ஆதித்யநாத்; அமைச்சர்கள் எம்.எல்.ஏ.,க்களுடன் சென்றார்
UPDATED : பிப் 11, 2024 01:25 PM
ADDED : பிப் 11, 2024 01:03 PM

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்
சபாநாயகர் சதீஷ் மஹானா, துணை முதல்வர்கள் மவுரியா, பிரஜேஷ்பதக் மற்றும் அமைச்சர்கள், எம்எல்.ஏ.,க்களுடன் சென்று வழிப்பட்டார்.
பக்தி, சக்தி இரண்டின் சங்கமம்
கோயிலுக்கு செல்லும் முன் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் அயோத்திய ராமர் கோயில் கட்டுமானம் நிறைவேற்றி உள்ளது. பக்தி, சக்தி இரண்டின் சங்கமமே ராமர் கோயில் அமைய காரணம். மகத்துவமான அந்த தருணத்தைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இந்த நாட்டின் ஆயுத படை, தேசத்தின் சுய சார்பு நிலைக்கு கொண்டு செல்வார்கள்.
சாமர்த் ராம்தாஸ், மாவீரர் சிவாஜியை உருவாக்கினார். சிவாஜி முகாலய அரசர் ஒளரங்கசீப்புக்கு சவாலாக விளங்கினார், அவர் துன்புற்று இறந்து போனார், யாரும் முகலாய மன்னரைப் பொருட்படுத்துவதில்லை. மஹாராஷ்டிரா வீரம் மிகுந்த மாநிலமாக இருப்பதற்கு காரணம், துறவிகள் வாழ்ந்த இடமாக இருப்பதால் தான். இவ்வாறு அவர் கூறினார்.

