இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்: விஜய் மல்லையாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டிப்பு
ADDED : டிச 23, 2025 10:22 PM

மும்பை: வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அவர் நேரில் வந்தால் மட்டுமே விசாரணை நடக்கும் எனக்கூறியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கியில் கடன் வாங்கிமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர்களை நாடு கடத்துவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அவர் மீது தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், இந்த சட்டத்தை எதிர்த்தும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அகாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விஜய் மல்லையா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் அஜரானார்.
அவர்களிடம் நீதிபதி கூறியதாவது: விஜய் மல்லையா நேரில் வந்து , நீதிமன்ற அதிகாரிகள் முன்பு ஆஜராகாத வரை இந்த சட்டத்தை எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ' விஜய் மல்லையா மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள், நாடு திரும்பி நீதிமன்றம் முன்பு ஆஜராகாத வரை, இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், விஜய் மல்லையா தொடர்ந்த எந்த வழக்கை விசாரிக்கலாம் என கேள்வி எழுப்பினர்.
அப்போது அமித் தேசாய், விஜய் மல்லையாவின் சொத்துகளில் 14 ஆயிரம் கோடி அளவுக்கு முடக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் கோடி ரூபாயை கடன் கொடுத்த வங்கிகள் வசூல் செய்துள்ளன எனத் தெரிவித்தார்.

