வழக்கு மேல் வழக்கு: வசமாக சிக்கும் மஹூவா - கைது செய்ய தீவிரம்
வழக்கு மேல் வழக்கு: வசமாக சிக்கும் மஹூவா - கைது செய்ய தீவிரம்
ADDED : ஏப் 02, 2024 07:06 PM

புதுடில்லி: பார்லிமென்டில், கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் சி.பி.ஐ.,எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதும், அமலாக்கத்துறை பண மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளதால் திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ராவுக்கு நெருக்கடி முற்றுகிறது.
மேற்கு வங்க மாநிலம் ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் லோக்சபா எம்.பி., மஹுவா மொய்த்ரா இவர், பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ராவின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஊழலுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் லோக்பால் கமிஷன் சி.பி.ஐ.,க்கு, உத்தரவிட்டது.இதையடுத்து மஹூவா மொய்த்ரா மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இதை தொடர்ந்து அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கினை பதிவு செய்துள்ளதால் மஹூவா மொய்த்ராவுக்கு நெருக்கடி முற்றுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் போல எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

