காங்.,கில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்
காங்.,கில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்
ADDED : ஏப் 03, 2024 03:24 PM

புதுடில்லி: பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.
பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். 2019 தேர்தலில் தெற்கு டில்லியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், உ.பி.,யின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமாமாலினியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.
பிறகு விஜேந்தர் சிங் கூறுகையில், ‛‛ விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பு அதிகரித்து உள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விஜேந்தர் சிங் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் ஹரியானா, மேற்கு உ.பி., ராஜஸ்தானில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் தேர்தலில் பா.ஜ.,வுக்கு கூடுதல் செல்வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

