டில்லியைத் தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
டில்லியைத் தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
UPDATED : செப் 12, 2025 03:44 PM
ADDED : செப் 12, 2025 01:11 PM

புதுடில்லி : டில்லி ஐகோர்ட்டைத் தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
டில்லி ஐகோர்ட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இமெயில் மூலம் வந்த மிரட்டலில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன, பிற்பகலில் வெடிக்கும் எனக்கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டன. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, ஐகோர்ட்டில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்கள் அனைவரும் வெளியேறினர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்படுவதுடன், மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
டில்லியைத் தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.