sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மம்தா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., சுவேந்து அதிகாரி

/

 மம்தா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., சுவேந்து அதிகாரி

 மம்தா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., சுவேந்து அதிகாரி

 மம்தா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., சுவேந்து அதிகாரி

2


ADDED : மார் 17, 2026 12:31 AM

Google News

2

ADDED : மார் 17, 2026 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 144 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, பா.ஜ., நேற்று வெளியிட்டது. இதன்படி, பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இதில் பவானிபூர் தொகுதி, முதல்வர் மம்தா பானர்ஜியின் கோட்டை. அவரது தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டியிட உள்ளது,

தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரி, அந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

முதல்வர் மம்தாவுக்கு மீண்டும் நேரடி சவால் விடும் வகையில், அவரது கோட்டைகளாக கருதப்படும் பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் சுவேந்து அதிகாரி களமிறங்குகிறார். முதற்கட்ட பட்டியலில், 10 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தவிர, பா.ஜ., மூத்த நிர்வாகிகள் ஸ்வபன் தாஸ்குப்தா - ராஷ்பெஹாரி; அக்னிமித்ரா பால் - ஆசன்சால் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே, ஆளும் திரிணமுல் காங்கிரசின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. பவானிபூர், நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்பது தெரிந்து விடும்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் மா.கம்யூ., 192 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. கொல்கட்டாவின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியில், அக்கட்சியின் மூத்த தலைவர் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா போட்டியிடுகிறார். இளம் தலைவரான மினாக்ஷி முகர்ஜி, ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள உத்தரப்பாரா தொகுதியில் களமிறங்குகிறார்.








      Dinamalar
      Follow us