60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 10 ஆண்டுகளில் பா.ஜ., செய்துள்ளது: நிதின் கட்கரி
60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 10 ஆண்டுகளில் பா.ஜ., செய்துள்ளது: நிதின் கட்கரி
ADDED : மே 22, 2024 01:27 AM

புதுடில்லி: 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி செய்யாத செயலை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ, செய்து சாதித்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு டில்லி லோக்சாபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் கமலிஜித் ஷெராவத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் கூறியது,
நாட்டில் பணப் பற்றாக்குறை இல்லை. நேர்மையான தலைவர்கள் உள்ளனர். திறமையான தலைமையின் கீழ் மட்டுமே நாடு முன்னேறும். கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியை தலைமையிலான பா.ஜ.. அரசு செய்துள்ளது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவதை பார்க்க வேண்டுமெனில் வரப்போகும் தேர்தலில் பா.ஜ.வை வெற்றி பெற செய்யுங்கள், காற்று மாசு, ஒலி மாசு ஆகியவற்றில் இருந்து டில்லியை மீட்க பா.ஜ.,வை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

