மோடியின் தாய் குறித்த போலி வீடியோ; பா-.ஜ., கண்டனம்
மோடியின் தாய் குறித்த போலி வீடியோ; பா-.ஜ., கண்டனம்
ADDED : செப் 13, 2025 05:43 AM

பாட்னா : பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணத்தை, அவரின் தாய் கண்டிப்பது போல் வெளியான போலி வீடியோவுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த வீடியோ தொடர்பாக, காங்கிரஸ் தலைமை விசாரணையை துவக்கி உள்ளது.
பீஹாரில் ஓட்டுத் திருட்டு நடந்திருப்பதாக கூறி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், அங்கு வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார்.
குற்றச்சாட்டு கடந்த மாதம் இறுதியில் நடந்த கூட்டத்தில், ராகுல் மற்றும் 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்த மேடையில், மோடியின் தாயை இழிவுபடுத்தும் வகையில் மர்ம நபர் ஒருவர் பேசினார்.
இந்த சம்பவத்துக்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாய் இடம் பெறும் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் சாயலில் உள்ள நபர், 'இன்றைய ஓட்டுத் திருட்டு முடிந்துவிட்டது; நிம் மதியாக துாங்கலாம்' என கூறிவிட்டு உறங்குகிறார்.
அப்போது, அவர் கனவில், மோடியின் தாய் மறைந்த ஹிரா பென் உருவத்தில் தோன்றும் பெண் வந்து பேசுகிறார்.
அதில், 'அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை பயன்படுத்துவதா? அரசியலுக்கு வந்த பின் எவ்வளவு துாரம் கீழே விழ நீங்கள் தயாராகிவிட்டீர்கள்?' என, அவர் கண்டிக்கிறார்.
இதை கேட்டு பிரதமர் உருவத்தில் இருக்கும் நப ர் திடுக்கிட்டு எழுவதுடன் வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோ, பீஹார் காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து பா.ஜ., வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'முன்னதாக, பிரதமர் மோடியின் தாயை மர்ம நபர் ஒருவர் இழிவுபடுத்தினார்.
'இப்போது, அவரையும், பிரதமரையும் அவமதிக்கும் வகையில், ஏ.ஐ., வீடியோ வெளி யிடப்பட்டுள்ளது. இவ்வளவு துாரம் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதற்கு காங்கிரசார் வெட்கப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எந்த ஒரு அடையாளமும் இன்றி வெளியிடப் பட்டுள்ள ஏ-.ஐ., வீடியோ குறித்த விசாரணையை பீஹார் காங்கிரஸ் துவங்கியுள்ளது.
நகைச்சுவை உணர்வு 'வீடியோவை உருவாக்கியது யார் என தெரிந்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அக்கட்சி தெரிவித்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, அந்த வீடியோவை ஆதரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
'பிரதமர் மோடி அரசியலில் இருக்கிறார்; எதிர்க்கட்சிகளின் நகைச்சுவை உணர்வு உட்பட அனைத்தையும் அவர் சரியாக கையாள வேண்டும். விமர்சனங்களை ஏற்க வேண்டும். இந்த விஷயங்களை அனுதாபத்துடன் அணுக கூடாது' என, தெரிவித்துள்ளார்.