பீஹாரை முன்னேற்றிய இரட்டை இன்ஜின் சர்க்கார்: அமைச்சர் பியூஷ் கோயல்
பீஹாரை முன்னேற்றிய இரட்டை இன்ஜின் சர்க்கார்: அமைச்சர் பியூஷ் கோயல்
ADDED : செப் 12, 2025 07:07 PM

பாட்னா: பீஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
பீஹாரில் இளைஞர்களின் எழுச்சியையும், மாநிலத்தின் முன்னேற்றத்தையும் பார்ப்பதில் பெருமை அடைகிறேன். மத்தியில் பிரதமர் மோடி மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் என்ற இந்த இரட்டை என்ஜின் அரசாங்கம் பீஹாருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதில் செயல்படுகின்றனர்.
மாநிலத்தின் முன்னேற்றத்தை கண்டுள்ள மக்கள், நிதிஷ்குமார் தலைமையில் பீஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். பீஹாரை வேறு ஒரு உயரத்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு செல்லும்.
எங்களை எப்படியும் தோற்கடித்தே தீர வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தை தேடி வருகின்றனர். ஆனால் மக்கள் புத்திசாலிகள்.
இவ்வாறு வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி அளித்தார்.