இளம் தலைமுறையின் 'ரோல் மாடல்': 18 வயதில் ரூ.100 கோடிக்கு அதிபரான பிரஞ்சலி அவஸ்தி!
இளம் தலைமுறையின் 'ரோல் மாடல்': 18 வயதில் ரூ.100 கோடிக்கு அதிபரான பிரஞ்சலி அவஸ்தி!
ADDED : செப் 20, 2025 12:16 PM

புதுடில்லி: 16 வயதில் இந்திய பெண் பிரஞ்சலி அவஸ்தி உருவாக்கிய ஏஐ நிறுவனத்தின் மதிப்பு, தற்போது அவரது 18 வயதில் 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த சாதனை பெண்ணின் வாழ்க்கை குறித்து ஒர் சிறப்பு அலசல் இதோ!
தொழில்நுட்பத்தில் வயது என்பது வெறும் எண் மட்டுமே, சாதிக்க வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்த பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் ஒன்று தான் 16 வயதில் இந்திய பெண் பிரஞ்சலி அவஸ்தி உருவாக்கிய ஏஐ நிறுவனத்தின் அபார வெற்றி. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பிரஞ்சலி அவஸ்தி என்ற பெண் 16 வயதில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் Delv.AI என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவினார்.
தற்போது அவஸ்தியின் 18 வயதில் அந்த நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி என்ற இலக்கை அடைந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. இப்போது 18 வயதாகும் அவர், Dash என்ற AI கருவியை பிரமாண்ட முறையில் உருவாக்கி வருகிறார். இவர் 7 வயதில் கோடிங் செய்யத் தொடங்கினார். 13 வயதில் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அவரது ஆர்வமும், விடா முயற்சியும் தான் 16 வயதில் 16 வயதில் ஏஐ நிறுவனத்தை உருவாக்க வழி வகுத்தது.
தற்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.100 கோடியாக (சுமார் 12 மில்லியன் டாலர்கள்) உயர்ந்துள்ளது. பிரஞ்சலி அவஸ்தியின் வெற்றிக்கதைக்கு பின்னார் அவரது தந்தை இருக்கிறார்.இந்தியாவில் பிறந்த பிரஞ்சலி அவஸ்தி 11 வயதில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு கணினி பொறியாளரான அவரது தந்தை, கோடிங் மீதான அவரது ஆர்வத்தை ஊக்குவித்தார்.
பள்ளியில் கணினி அறிவியல் பாடபிரிவில் பிரஞ்சலி அவஸ்திக்கு அளவு கடந்த ஆர்வம் இருந்துள்ளது. அவர் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தின் நியூரல் டைனமிக்ஸ் ஆஃப் கண்ட்ரோல் ஆய்வகத்தில் பயிற்சி பெற்று தனது திறமையை வளர்த்து கொண்டாள். Delv.AI என்பது AI-இயங்கும் தளமாகும். இது PDFகள் மற்றும் பலவற்றிலிருந்து தகவல்களை அறியவும், சுருக்கமான தகவல்களை உருவாக்கவும் உதவுகிறது. தற்போது அவர் பல்வேறு அதிநவீன வசதிகளுடம் ஏஐ கருவி ஒன்றை உருவாக்கி உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.