ADDED : மார் 21, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, இடங்கணசாலை அருகே மடத்துார் வைத்தீஸ்வரன் கோவில், சில ஆண்டுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது.
தற்போது அறங்காவலர் குழு நியமித்துள்ளதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று பூசாரியிடம் கடிதம் வழங்கினர். இதனால் நேற்று காலை, 11:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் குவிந்தனர். உடனே அங்கு வந்த, சங்ககிரி அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகா, பேச்சு நடத்தினர். மக்கள் சமாதானம் அடையாததால், சாலை மறியலுக்கு தயாராகினர். பின் ஊர் முக்கிய பிரமுகர்கள், சாலை மறியல் வேண்டாம் என கூறியதால், பக்தர்கள் கலைந்து சென்றனர்.

