sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மைசூரு பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் இணைப்பு பஸ்கள்

/

மைசூரு பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் இணைப்பு பஸ்கள்

மைசூரு பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் இணைப்பு பஸ்கள்

மைசூரு பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் இணைப்பு பஸ்கள்


ADDED : மார் 12, 2024 03:19 AM

Google News

ADDED : மார் 12, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மெட்ரோ ரயில் பயணியருக்காக, இன்று முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்' என, பெங்களூரு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பி.எம்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

வழித்தடம் எண் 47: மைசூரு சாலை பேருந்து நிலையத்தில் இருந்து அத்திகுப்பே, விஜயநகர், சீனிவாசநகர், பட்டேகாரபாளையம், மலகளா, சும்மனஹள்ளி ஜங்ஷன், கொட்டிகேபாளையா, பாபாரெட்டி பாளையா, கென்குன்டே சதுக்கம், நாகரபாவி சதுக்கம் வழியாக மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.

இங்கிருந்து தினமும் அதிகாலை 5:40 மணிக்கு முதல் பேருந்தும்; இரவு 11:10 மணிக்கு கடைசி பேருந்தும் புறப்படுகிறது.

அதுபோன்று மறுமார்க்கத்தில் வழித்தடம் எண் 47 'ஏ': மைசூரு சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நாகரபாவி சதுக்கம், கென்குன்டே சதுக்கம், பாபாரெட்டி பாளையம், கொட்டிகேபாளையம், சும்மனஹள்ளி ஜங்ஷன், மலகளா, பட்டேகாரபாளையம், சீனிவாச நகர், விஜயநகர், அத்திகுப்பே வழியாக மைசூரு சாலை பேருந்து நிலையத்துக்கு வந்தடையும்.

இங்கிருந்து தினமும் அதிகாலை 5:50 மணிக்கு முதல் பேருந்தும்; இரவு 11:30 மணிக்கு கடைசி பேருந்தும் இயக்கப்படுகிறது. பயணியர் வசதிக்காக கூடுதலாக தலா மூன்று வீதம், ஆறு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us