ADDED : ஆக 03, 2025 08:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஆடிப்பெருக்கை முன்னிட்டு, புதுடில்லி க்யாலா தேவி கருமாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

