ADDED : டிச 13, 2025 11:45 PM

திட்டங்களின் பெயர்களையும், சட்டங்களின் பெயர்களையும் மாற்றுவதில் திறமையானது, மத்திய அரசு. முன்னாள் பிரதமர் நேருவை வெறுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இப்போது மஹாத்மா காந்தியையும் வெறுக்க துவங்கியுள்ளது. 'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என்ற பெயரை ஏன் மாற்ற வேண்டும்?
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
நடுநிலை நடுவர் இல்லை!
பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் எவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுகிறது என்பதை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். ஓட்டு திருட்டு குறித்து புகார் அளித்தும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலை நடுநிலையாக நடத்தும் நடுவர் நம்மிடம் இல்லை.
வேணுகோபால் செய்தி தொடர்பாளர், காங்.,
ஜனநாயகத்துக்கு எதிரான சதி!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால், உத்தர பிரதேசத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நீக்கப்பட்டால், தேர்தல் கமிஷனும், பா.ஜ.,வும் இணைந்து நடத்திய ஜனநாயகத்துக்கு எதிரான சதி.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி

