காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு
காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு
UPDATED : மே 14, 2024 02:21 AM
ADDED : மே 14, 2024 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு நேற்று
நடந்த தேர்தலில் 38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு
முழுதும் 18வது லோக்சபாவை தேர்தல் ஏழு
கட்டங்களாக நடக்கிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள
நிலையில், நான்காம் கட்டமாக, ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு
யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு
நடந்தது.
இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு 38 சதவீத வாக்குப்பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

