''நாட்டின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால்...'': மே.வங்க பா.ஜ., தலைவர் சொல்வது என்ன?
''நாட்டின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால்...'': மே.வங்க பா.ஜ., தலைவர் சொல்வது என்ன?
ADDED : ஜன 23, 2024 12:08 PM

கோல்கட்டா: 'நாட்டின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் நாடு பிரிந்திருக்காது, மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்' என மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.,வை சேர்ந்த அம்மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுபாஷ் சந்திரபோஸ் நமது நாட்டின் முதல் பிரதமராக இருந்திருந்தால், நாடு பிரிந்திருக்காது என நம்புகிறேன். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பர்.
இந்தியாவில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழல் ஒழிந்திருக்கும். மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு ஹிந்துக்களும் தங்கள் வீடுகளில் இருந்தாலும் நேற்று ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இது மகிழ்ச்சிக்கான தருணம். ராம் லல்லா மீண்டும் பிறந்த இடத்திற்கு வந்துள்ளார். பிற மதத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

