தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
UPDATED : மே 21, 2024 05:03 PM
ADDED : மே 21, 2024 04:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காவிரியில் தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்படவில்லை. அடுத்த கூட்டம் ஜூன் மாதம் முதல் வாரம் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

