ஒரு ஓட்டு வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவேன்: ரமேஷ் ஜிகஜினகி
ஒரு ஓட்டு வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவேன்: ரமேஷ் ஜிகஜினகி
ADDED : மார் 23, 2024 11:09 PM

விஜயபுரா: ''இதுவே என் கடைசி தேர்தல். கடந்த முறை 2.70 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இம்முறை குறைந்தபட்சம் ஒரு ஓட்டு வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவேன்,'' என, விஜயபுரா பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
இம்முறை போட்டியிட வேண்டாம் என, நானும், என் பிள்ளைகளும் முடிவு செய்திருந்தோம். ஆனால் கட்சி மேலிடம் என்னை களமிறக்கி உள்ளது. எனவே போட்டியிடுகிறேன். சிலர், எனக்கு சீட் கிடைக்காமல் தடுக்க முயற்சித்தனர். மேலிடம் எனக்கு ஆதரவாக நின்றது. எனக்கு எதிராக போட்டியிடும் அதிருப்தி வேட்பாளர் குறித்து, நான் பதிலளிக்கமாட்டேன்.
கடந்த தேர்தலில், 2.60 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இம்முறையும் அதே போன்று ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, நம்புகிறேன். குறைந்தபட்சம் ஒரு ஓட்டு வித்தியாசத்திலாவது, வெற்றி பெறுவேன். இதுவே என் கடைசி தேர்தல்.
நான் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில், பலரும் 'நீங்கள் வராதீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கிறோம்' என்கின்றனர். எனவே வெற்றி என்னுடையதே.
ராமகிருஷ்ண ஹெக்டே, ஜெ.ஹெச்.படேல் பாசறையில் பழகியவன் நான். சங் பரிவார் பின்னணி கொண்ட ஈஸ்வரப்பா குறித்து, பேசும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல.
பச்சேகவுடாவுக்கு வயதாகிவிட்டதாலும், அவரது மகன் காங்கிரசில் இருப்பதாலும், ராஜினாமா செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

