சி.பி.ஐ., ஈ.டி, மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: மம்தா பேச்சு
சி.பி.ஐ., ஈ.டி, மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்: மம்தா பேச்சு
ADDED : ஏப் 04, 2024 01:20 PM

கோல்கட்டா: ' சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் ஈ.டி, போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு நாங்கள் (திரிணமுல் காங்கிரஸ்) அஞ்சமாட்டோம்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நமது அரசு சிறப்பாக செயல்பட்டன. எங்கள் கட்சிக்கு பேரழிவு ஏற்பட்டது. செல்வம் பா.ஜ.,வுக்கு சென்றது.
சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் ஈ.டி, போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு நாங்கள் (திரிணமுல் காங்கிரஸ்) அஞ்சமாட்டோம். விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ., பயன்படுத்துகிறது.
விசாரணை அமைப்புகள் பா.ஜ.,வுக்காகச் செயல்படுவதால், சமநிலையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியை பா.ஜ., மட்டும் பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

