ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: அகிலேஷ் தருகிறார் வாக்குறுதி
ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: அகிலேஷ் தருகிறார் வாக்குறுதி
ADDED : ஜூலை 27, 2024 01:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூகவலைதளத்தில், அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய கால ராணுவ ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டத்தை, 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். மீண்டும் பழைய முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.
அக்னிபாத் திட்டத்தில் பணிபுரியும், ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என அகிலேஷ் கூறியுள்ளார். இது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

