/
செய்திகள்
/
இந்தியா
/
பிரசாரத்துக்கு வர மறுக்கும் தொண்டர்கள் வெயிலால் விழி பிதுங்கும் வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு வர மறுக்கும் தொண்டர்கள் வெயிலால் விழி பிதுங்கும் வேட்பாளர்கள்

ADDED : ஏப் 09, 2024 06:12 AM
கர்நாடகாவில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. இதனால் தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்கள் கிடைக்காமல், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அவதிப்படுகின்றனர்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ., --- ம.ஜ.த., உட்பட, அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் அனல் பறக்க பிரசாரம் செய்கின்றனர்; தொகுதிகளை சுற்றி வருகின்றனர். ஆனால் தொண்டர்கள், பொது மக்களை பிரசாரத்துக்கு அழைத்து வருவது, வேட்பாளர்களுக்கு பெரும்பாடாக உள்ளது.
உடல்நல கோளாறு
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், வெயில் தீயாக கொளுத்துகிறது. வீட்டை விட்டு வெளியே கால் வைக்கவே, மக்கள் அஞ்சுகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் உடல் சோர்வு, கை,கால் வலி, மயக்கம், வாந்தி, வயிற்று போக்கு போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
எனவே, பலரும் வீட்டுக்குள் இருக்கவே விரும்புகின்றனர். அரசியல் கட்சி நிர்வாகிகள் வந்து அழைத்தாலும் பிரசார நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். மாலை நேரம் தான் பலரும் வீட்டை விட்டே வெளியில் வருகின்றனர்.
இதற்கு முன் தேர்தல் என்றால், அனைத்து இடங்களிலும் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கூட்டம், கூட்டமாக தென்படுவர்.
ஆட்டோக்கள், டெம்போ போன்ற வாகனங்களில் தொண்டர்கள் கூட்டம், ஒலி பெருக்கிகளை அலற விட்டபடி, வேட்பாளருக்கு ஆதரவாக கோஷமிடும் காட்சிகளை, பல இடங்களில் காணலாம்.
ஆனால், இம்முறை லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களுடன் அதிகமான தொண்டர்களை காண முடிவதில்லை. இதற்கு வெப்பத்தின் தாக்கமே முக்கிய காரணம்.
அதிக பணம்
வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரும் கூலி தொழிலாளர்கள், தொண்டர்களுக்கு தினமும் 300 முதல் 500 ரூபாய் வரை வழங்கப்படும். தொலைவில் இருந்து வருவோருக்கு, அங்கிருந்து வர வாகன வசதி செய்து, 1,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
மேலும், இரண்டு வேளை உணவு வசதியும் செய்யப்படுகிறது. பிரியாணி உட்பட பல வகை உணவுகள் வழங்கப்படும். சிலர் அதிகம் பணம் கேட்டாலும், வேட்பாளர்கள் தாராளமாகவே பணம் தருகின்றனர். ஆனாலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, தொண்டர்கள், தொழிலாளர்கள் பிரசாரத்துக்கு கிடைப்பது கஷ்டமாக உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்த தயங்குகின்றன.
வேட்பாளர்களும் பகல் நேரங்களில் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு சென்று ஆதரவு கேட்கின்றனர்- நமது நிருபர் -.