ரயில் தண்டவாளத்தில் லாரி மோதல் 2 மணி நேரம் பரிதவித்த பயணியர்
ரயில் தண்டவாளத்தில் லாரி மோதல் 2 மணி நேரம் பரிதவித்த பயணியர்
ADDED : ஏப் 19, 2024 06:35 AM

ஷிவமொகா: ஷிவமொகாவின் பத்ராவதியில் ரயில்வே பாலத்தின் மீது லாரி மோதியதில், ரயில்பாதை சேதமடைந்தது. இதனால் இரண்டு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஷிவமொகா மாவட்டம், பத்ராவதியின் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் எதிரே, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக மோதியது. படுகாயமடைந்த லாரி ஓட்டுனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
மேம்பாலத்தில் மோதியதால், ரயில் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டது. உடனடியாக பத்ராவதி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த ஊழியர்கள், ரயில்பாதையை சரி செய்ததனர். அதுவரை ஷிவமொகா - பத்ராவதி இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பத்ராவதி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு - தாலகுப்பா விரைவு ரயில், 6:30 மணி வரை அங்கேயே நின்றிருந்தது.
அதுபோன்று, ஷிவமொகாவில் இருந்து அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு ஜன்சதாப்தி ரயில், 6:35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர்.
� லாரி மோதியதில் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட சேதம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. � ரயில் பாதையை ஆய்வு செய்த ரயில்வே ஊழியர். இடம்: பத்ராவதி, ஷிவமொகா.

