ADDED : ஜூன் 10, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி : தரைபாலத்தை கடக்கும் போது, டிராக்டர் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உயிர் தப்பினர்.
பெலகாவி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முத்தோலின் அவராதி கிராமத்தை சேர்ந்த 13 பேர், கூலி வேலைக்காக நந்தகோன் கிராமத்துக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.
நந்தகோன் அருகே தரைபாலத்தை மூழ்கடித்து, கட்டபிரபா ஆற்று தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. டிராக்டர் ஓட்டுனர், தரைபாலத்தை கடக்கும் போது, ஆற்றில் வேகத்தால் கவிழ்ந்தது.
இதில், ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். மற்ற 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அடித்து செல்லப்பட்டவரின் உடலை, தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுஉள்ளனர்.
குல்கோடா போலீசார் விசாரிக்கின்றனர்.

