
தாலுகா தகுதி கிடைக்குமா?
கோல்டு சிட்டி அரசு மருத்துவமனையில் கட்டடங்களுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டால் சிகிச்சைக்கு கோலாருக்கு தான் போக வேணும். இது வரை இதய பிரிவுக்கு டாக்டர் நியமிக்கப்படவில்லை.
மக்கள் பிரதிநிதிகள் அது சாதனை, இது சாதனை என்கிறாங்க. ஸ்கேனிங் மிஷின் ஆப்பரேட்டர், டாக்டர் என எதுவும் இல்லையே. ஐ.சி.யு., பிரிவு மட்டுமே இருக்குது. எப்போ செயல்பாட்டுக்கு வரப்போகுதோ.
கோல்டு சிட்டியில், போலீஸ் துறையை மாவட்டமாக ஆக்கினாங்க. நீதிமன்றம், ஸ்பெஷல் ஜெயில், ஆர்.டி.ஓ., எல்லாமே இயங்க வெச்சாங்க. ஐந்து ஆண்டுக்கு முன்னாடி தான், கோல்டு சிட்டி தாலுகா ஆக்கப்பட்டது. இன்னும் கூட கவர்மென்ட் ஆஸ்பிட்டல், தாலுகா தகுதியை பெறலயாம். இதனால தான் டாக்டர்களை நியமனம் செய்யலயாம்; இருக்கின்ற டாக்டர்களை மற்ற தாலுகாவுக்கு அனுப்புறாங்களாம். இதன் பேரில் யார் கவனம் செலுத்த போறாங்களோ?
வேலை இல்லாத தலைவர்கள்
கோல்டு சிட்டியில் மைன்சை முன் வைத்து தான் அரசியல் கட்சிகள் வேரூன்றின. அரசியல் தலைவர்களும் ஆதாயம் பெற்றாங்க. இங்கு கட்சிக்கொரு தொழிற்சங்கம் ஏற்படுத்தினாங்க. இதனால் 18 தொழிற்சங்கங்களும் முளைத்தன. மைன்சை மூடின பின், தொழிற்சங்கங்களையும் மூட வேண்டியதாச்சி. தலைவர்களுக்கு வேலை இல்லாமல் போச்சு. தொழிலாளர்களை அம்போன்னு விட்டுட்டாங்க. வேலை தேடி பலரும் வெளியூருக்கு போறாங்க. வேலை இல்லா தலைவர்கள் என்ன செய்வாங்க?
என்னானது அடுக்குமாடி சந்தை?
தங்க முனிசி.,யில் முதற் கட்ட தலைவர் பதவிக்காலம் முடிஞ்சு 13 மாசம் ஓடிடுச்சு. அடுத்த கட்ட இரண்டரை ஆண்டு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாமல், 13 மாதங்கள் வீணாகிப் போனது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் ஆபீசர்கள் 'தர்பார்' தான் நடக்குது. பேருக்கு தான் பதவி. ஊருக்கு பயன்படவில்லை. எல்லாமே அசெம்பிளிகாரரின் கன்ட்ரோலில் தான் இயங்குது. விசாலமான புல் மார்கெட் இடத்தில் 100 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி சந்தை ஏற்படுத்தும் திட்டம் என்னானதோ. புதுசா வாகன நிறுத்தமிடம் வருதுன்னு அறிவிப்பு செஞ்சதும் வேஸ்டா?

