தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஆக 21, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது தான் பா.ஜ., விருப்பம்!

ஏழைகள், தலித் மற்றும் சமூக நீதிக்காக எப்போதும் ஆதரவாக இருப்பதால், பா.ஜ., என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. சமூக, பொருளாதார ரீதியாக, ஏழைகள் முன்னேறக் கூடாது என்பதே பா.ஜ.,வின் விருப்பம்.

சித்தராமையா

கர்நாடக முதல்வர்,

காங்.,

உண்மையை மறைக்க முயற்சி!

கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், உண்மையை மறைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் திரிணமுல் காங்., அரசு முயற்சிக்கிறது. பலாத்காரம் செய்தவரை காப்பாற்ற மம்தா அரசு முயற்சிக்கிறது.

ஷாஜாத் பூனாவல்லா

பா.ஜ.,

செய்தித் தொடர்பாளர்

பழிவாங்கும் அரசியல் இல்லை!

ஒரு காலத்தில் பிளவுபடாத சிவசேனாவும், காங்கிரசும் எதிரெதிர் திசையில் கசப்பான மனநிலையுடன் இருந்தன. அந்த சமயத்தில், ராஜிவ் தலைமையிலான காங்., அரசை, பால் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். ஆனால், அவர் ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடவில்லை.

உத்தவ் தாக்கரே

தலைவர், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us