தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜூலை 06, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோரனுக்கு அதிகார பசி!

பா.ஜ., அமலாக்கத்துறையை வைத்து யாரையும் துன்புறுத்தவும் இல்லை; பாதுகாக்கவும் இல்லை. சிறையில் இருந்து வந்தவுடன் ஜார்க்கண்ட் முதல்வராகி உள்ளார் ஹேமந்த் சோரன். இதற்காக முதல்வர் சம்பய் சோரனை அவமதித்துள்ளனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிகாரப் பசி ஏற்பட்டுள்ளது.

சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஆகஸ்டில் ஆட்சி கவிழும்!

மத்தியில் உள்ள மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் அது கவிழும். எப்போது வேண்டுமானாலும் லோக்சபா தேர்தல் நடக்கலாம் என்பதால், கட்சித் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

லாலு பிரசாத் யாதவ்

தலைவர்,

ராஷ்ட்ரீய

ஜனதா தளம்

பாடப்புத்தகங்களே இல்லை!

மூன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகம் அறிவிக்கப்பட்டது. ஆனால், என்.சி.இ.ஆர்.டி., எனும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அறிவியல், கணிதம், சமூக அறிவியலுக்கு பாடத்திட்டத்தையும் இறுதி செய்யவில்லை; பாடப்புத்தகங்களையும் வெளியிடவில்லை.

ஜெய்ராம் ரமேஷ்

பொதுச்செயலர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us