ADDED : மே 14, 2024 01:23 AM

வாழ்க்கையை மாற்றும்!
சுதந்திர போராட்டம் முதல், நவீன இந்தியாவை உருவாக்குவது வரை, பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால், தற்போது அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பெண்களின் வாழ்க்கை முறையை காங்கிரசின்உத்தரவாதங்கள் மாற்றும்.
சோனியா
மூத்த தலைவர், காங்.,
மகிழ்ச்சி இல்லை!
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., அரசின் அட்டூழியத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இங்கு ஒருவர் கூட மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி மீது, மாநில மக்கள் நம்பிக்கை வைத்துஉள்ளனர். பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க அவர்கள் முடிவு செய்து விட்டனர்.
திலீப் கோஷ்
மூத்த தலைவர், பா.ஜ.,
தோற்பது உறுதி!
லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் பொய். இவற்றை மக்கள் நம்ப மாட்டார்கள். அவர் எத்தனை வாக்குறுதிகள் அளித்தாலும், ஆம் ஆத்மியும், இண்டியா கூட்டணியும் தோற்பது உறுதி.
அனுராக் தாக்குர்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
