ADDED : செப் 14, 2024 01:31 AM

ராஜினாமா தேசநலனுக்கு நல்லது!
மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் தேசத்திற்கும், மேற்கு வங்கத்திற்கும் நன்மை பயக்கும். மேற்கு வங்கத்தில் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும். மேற்கு வங்கத்தில் அரசியலமைப்புக்கு எதிரான செயல்கள் அதிகமாக நடக்கின்றன.
கைலாஷ் விஜய்வர்கியா
ம.பி., அமைச்சர், பா.ஜ.,
பசுவதை சட்டத்தில் திருத்தம்!
ஒடிசா பசுவதை தடுப்புச் சட்டத்தில் பயனுள்ள மாற்றங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த சட்ட திருத்தம் பசுக்களுக்கு எதிரான கொடுமையை குறைப்பதில் பயனுள்ள வகையில் செயல்படும். மேலும், பால் உற்பத்தியை அதிகரிக்க 1,423 கோடி ரூபாயில் முதல்வர் காமதேனு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மோகன் சரண் மஜி
ஒடிசா முதல்வர், பா.ஜ.,
ராகுல் ஒரு 'யூஸ்லெஸ்'
ராகுல் திறமையற்ற மனிதர். அவர் எப்போது வெளிநாடு சென்றாலும், அங்கு இந்தியாவுக்கு எதிராக பேசுகிறார். இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று அவர் பேசியதற்காக இந்திய குடியரசு கட்சி சார்பில் அவர் மீது செருப்பு வீசும் போராட்டத்தை தேசிய அளவில் நடத்த உள்ளோம்.
ராம்தாஸ் அத்வாலே
மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி
