ஒரு வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை
ஒரு வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை
ADDED : மார் 31, 2024 06:09 AM

மங்களூரு ; மங்களூரு அடையாரில் வசிப்பவர் நாகராஜ், 32. இவரது மனைவி சைத்ரா, 30. இந்த தம்பதியின் மகன் தியான்ஸ், 1. கடந்த 28ம் தேதி தியான்ஸின் முதல் பிறந்தநாள். மகன் பிறந்தநாளை நாகராஜ், சைத்ரா தம்பதி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குழந்தையுடன், வீட்டில் இருந்து சைத்ரா திடீரென மாயமானார். அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சமூக வலைத்தளங்களில், சைத்ரா, குழந்தையை பற்றி தகவல் பதிவிட்டனர்.
அவர்களை பற்றி விபரம் தெரிந்தால், தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டு இருந்தனர். நேற்று முன்தினம் இரவு மங்களூரு ரூரல் பகுதியில் நேத்ராவதி ஆற்றில் தாயும், மகனும் பிணமாக மிதந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் குழந்தையுடன் ஆற்றில் குதித்து நேத்ரா தற்கொலை செய்தது தெரிந்தது. காரணம் தெரியவில்லை. நாகராஜிடம் விசாரணை நடக்கிறது.

