ADDED : ஆக 28, 2024 07:20 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில், இரண்டு வழித் தடங்களில் மொஹல்லா பஸ் சோதனை சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது.
இதுகுறித்து, டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியதாவது:
பிரதான் என்கிளேவ் புஷ்தா முதல் மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் மற்றும் அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மயூர் விஹார் -3 பேப்பர் மார்க்கெட் வரை இரண்டு வழித் தடங்களில் மொஹல்லா பஸ் சோதனை ஓட்டம் ஏற்கனவே நடக்கிறது. தற்போது, - கைலாஷ் காலனி மெட்ரோ நிலையம் முதல் கீதாஞ்சலி காலனி வரை மற்றும் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ நிலையம் முதல் வசந்த் விஹார் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டம் துவக்கப்பட்டுள்ளது.
மொஹல்லா திட்டத்தில் பச்சை நிற பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் 196 கி.வா., திறன் கொண்ட ஆறு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, 200 கி.மீ., தூரம் வரை செல்லும். இந்த பேட்டரிகளை 45 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்துவிட முடியும்.
ஒன்பது மீட்டர் நீளமுள்ள இந்த பஸ்களில் 23 பயணியர் உட்கார்ந்தும் 13 பேர் நின்றும் நின்றும் பயணம் செய்யலாம். இதில், பெண்களுக்காக 6 இருக்கைகள் இளஞ்சிவப்பு அமைக்கப்பட்டுள்ளன.

