ADDED : ஏப் 04, 2024 10:50 PM

ராம்நகர்,- கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் காரை மறித்து, பா.ஜ.,வினர் மோடி கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு ரூரல் தொகுதியில், காங்கிரஸ் சார்பில், துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் போட்டியிடுகிறார். இவர் நேற்று, ராம்நகர் கலெக்டர் அலுவலகத்தில் முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பின், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், நுழைவு பகுதியில் அவரது காரை வழிமறித்த சில பா.ஜ., தொண்டர்கள் மோடி, மோடி என கோஷம் எழுப்பினர்.
இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரது காருக்கு வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ராம்நகரில் செல்வாக்கு மிக்க சுரேஷுக்கு எதிராக பா.ஜ.,வினர் கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை, அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும் கண்டு கொள்ளவில்லை.

