ADDED : மே 13, 2024 09:39 PM
பெங்களூரு: கர்நாடகாவில் ஜூன் 3ம் தேதி நடக்கும் எம்.எல்.சி., தேர்தலில் மொத்தம் 3 லட்சத்து, 85 ஆயிரத்து, 775 வாக்காளர்கள் ஓட்டுப் போட தகுதி பெற்று உள்ளனர்.
கர்நாடகாவில் வடகிழக்கு பட்டதாரி; பெங்களூரு பட்டதாரி; தென்கிழக்கு ஆசிரியர்; தென் மேற்கு ஆசிரியர்; தென்மேற்கு பட்டதாரி; தெற்கு ஆசிரியர் ஆகிய ஆறு தொகுதிகளுக்கு ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தும், காங்கிரஸ் தனித்தும் போட்டியிடுகின்றன. ஏற்கனவே பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
இந்நிலையில், பெங்களூரு பட்டதாரி தொகுதியில் ஒரு லட்சத்து, 100 பேர் உள்ளனர். இதில், ஆண்கள் 48 ஆயிரத்து, 236; பெண்கள் 51 ஆயிரத்து, 852; திருநங்கையர் 12 பேர் உள்ளனர்.
தென்மேற்கு பட்டதாரி தொகுதியில் மொத்தம் 74 ஆயிரத்து, 218 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 38 ஆயிரத்து, 51; பெண்கள் 36 ஆயிரத்து, 162; திருநங்கையர் 5 பேர் உள்ளனர்.
வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 184 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஆண்கள் 95 ஆயிரத்து, 104; பெண்கள் 55 ஆயிரத்து, 61; திருநங்கையர் 19 பேர் உள்ளனர். ஆக இம்மூன்று தொகுதியிலும் 3 லட்சத்து, 24 ஆயிரத்து, 502 வாக்காளர்கள் உள்ளனர்.
அதேபோன்று, தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் 23 ஆயிரத்து 514 வாக்காளர்கள் உள்னர். இவர்களில் ஆண்கள் 14 ஆயிரத்து, 679; பெண்கள் 8 ஆயிரத்து, 835 பேர் உள்ளனர்.
தென்மேற்கு ஆசிரியர் தொகுதியில், 19 ஆயிரத்து, 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 8,943; பெண்கள் 10 ஆயிரத்து, 437 பேர் உள்ளனர்.
தெற்கு ஆசிரியர் தொகுதியில் 18 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 10 ஆயிரத்து, 335; பெண்கள் 8,022; திருநங்கையர் இருவர் உள்ளனர். ஆக இம்மூன்று தொகுதியில் 61 ஆயிரத்து, 273 வாக்காளர்கள் உள்ளனர்.

