ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க அனுமதி
ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க அனுமதி
ADDED : ஆக 25, 2024 02:35 AM

ஜெய்ப்பூர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை ராஜஸ்தான் அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1966ம் ஆண்டு நவம்பரில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் இந்த தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டது. அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்து செயல்படலாம் என அறிவித்தது.
இதையடுத்து ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் விதிக்கப்பட்ட இந்த தடை உத்தரவை நீக்கின.
இந்நிலையில், ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., அரசும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை நேற்று நீக்கியது.
இதுதொடர்பாக மாநில அரசு பணியாளர் நலத்துறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையில், கடந்த 1972 மற்றும் 1981 ஆகிய காலகட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின், 52 ஆண்டுகால தடை உத்தரவு நீக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

