sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுர்பூர் சட்டசபை தொகுதியில் 'மாஜி' அமைச்சர் ராஜுகவுடா இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்குகிறார்

/

சுர்பூர் சட்டசபை தொகுதியில் 'மாஜி' அமைச்சர் ராஜுகவுடா இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்குகிறார்

சுர்பூர் சட்டசபை தொகுதியில் 'மாஜி' அமைச்சர் ராஜுகவுடா இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்குகிறார்

சுர்பூர் சட்டசபை தொகுதியில் 'மாஜி' அமைச்சர் ராஜுகவுடா இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்குகிறார்


ADDED : மார் 26, 2024 09:47 PM

Google News

ADDED : மார் 26, 2024 09:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : யாத்கிர் மாவட்டம், சுர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜுகவுடா களமிறக்கப்பட்டுள்ளார். இவர், இத்தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.

யாத்கிர் மாவட்டம், சுர்பூர் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜா வெங்கடப்பா நாயக், மாரடைப்பு ஏற்பட்டு கடந்த பிப்ரவரி 25ம் தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து, சுர்பூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தொகுதிக்கு, மே 7ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தலுடன், இடைத்தேர்தல் நடப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது.

* மே 7ல் ஓட்டுப்பதிவு

மனு தாக்கலுக்கு, ஏப்., 19ம் தேதி கடைசி நாள். ஏப்., 20ம் தேதி மனுக்கள் பரிசீலனை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு, ஏப்., 22ம் தேதி கடைசி நாள். மே 7ம் தேதி, ஓட்டுப்பதிவு. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இத்தொகுதியில், 1,41,682 ஆண்கள்; 1,39,729 பெண்கள்; 28 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,81,439 வாக்காளர்கள் உள்ளனர். இளம் வாக்காளர்கள் 6,104; மாற்றுத்திறனாளிகள் 3,785 மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோர் 2,383 பேர் உள்ளனர். 237 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுர்பூர் சட்டசபை தொகுதி, எஸ்.டி.,க்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக்கின் மகன் ராஜா வேணுகோபால் நாயக் களமிறக்கப்பட்டுள்ளார்.

* 4வது முறை

அவருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ராஜுகவுடா எனும் நரசிம்ம நாயக், பா.ஜ., வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில், ஏற்கனவே மூன்று முறை ராஜுகவுடா வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது நான்காவது முறையாக களமிறக்கப்பட்டுள்ளார். செல்வாக்கு மிக்க இளம் தலைவராக தொகுதியில் வலம் வருவதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த ராஜா வெங்கடப்பா நாயக், நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். தந்தைக்கு துணையாக மகன் ராஜா வேணுகோபால் நாயக் அரசியலில் பணியாற்றிய அனுபவம் உண்டு. இரண்டு வேட்பாளர்களும் சமபலத்துடன் இருப்பதால், மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

* ஓட்டு வித்தியாசம்

பா.ஜ., வேட்பாளர் ராஜுகவுடா யாத்கிரில் நேற்று கூறியதாவது:

பா.ஜ., தலைமை என் மீது நம்பிக்கை வைத்து, மீண்டும் வாய்ப்பு தந்துள்ளது. வாய்ப்புக்கு நன்றி. கண்டிப்பாக வாக்காளர்களின் மனதில் இடம்பிடித்து, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் இழந்த வெற்றியை தற்போது பெற்று, நிரூபிப்பேன். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி செய்த சாதனைகள், கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசின் சாதனைகளை விளக்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருவேளை சுர்பூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் 135 ஆகவே இருக்கும். பா.ஜ., வெற்றி பெற்றால், 66ல் இருந்து, 67 ஆக உயரும். யார் கை ஓங்கும் என்பது தேர்தலுக்கு பின், தெரியும்.

***






      Dinamalar
      Follow us