sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது நிதீஷுக்கு மத்திய அரசு கைவிரிப்பு

/

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது நிதீஷுக்கு மத்திய அரசு கைவிரிப்பு

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது நிதீஷுக்கு மத்திய அரசு கைவிரிப்பு

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது நிதீஷுக்கு மத்திய அரசு கைவிரிப்பு


ADDED : ஜூலை 23, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,

அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின், 2012ம் ஆண்டு அறிக்கையை மேற்கோள்காட்டி, பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த ஒரு வாய்ப்பும் ஏற்படவில்லை என, மத்திய அரசு பார்லிமென்டில் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தது.

பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், நிதீஷ் குமார் கட்சி முக்கியமான கட்சியாக உள்ளது.

வலியுறுத்தல்

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என, ஐக்கிய ஜனதா தளம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. சிறப்பு அந்தஸ்து அளிக்கும்போது, மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி, திட்டங்களை செயல்படுத்துவதில் வேகமெடுக்கும்.

இதுபோலவே, தெலுங்கானா பிரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என, அங்குள்ள கட்சிகள் வலியுறுத்துகின்றன. தற்போது ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. மத்தியில் ஆளும் கூட்டணி அரசிலும் தெலுங்கு தேசம் மிக முக்கியமான கட்சியாக உள்ளது. அந்த கட்சியும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வருகிறது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இதை வலியுறுத்தினர்.

நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா வலியுறுத்தினார்.

பீஹாரைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான் கட்சியும் இதை வலியுறுத்தின.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்படி அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியது. இதுபோல, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டுள்ளது.

நிதி ஆதாரங்கள்

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்பிரீத் மண்டலின் கேள்விக்கு, லோக்சபாவில் நேற்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:

தேசிய வளர்ச்சி கவுன்சில் பரிந்துரைகளின்படி, முன்பு சில மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. கடினமான நிலப்பரப்பு, மிகவும் குறைவான மக்கள்தொகை அடர்த்தி அல்லது அதிகமான பழங்குடியின மக்கள்தொகை, அண்டை நாடுகளுடனான எல்லையில் அமைந்துள்ள மாநிலங்கள், பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பில் பின்தங்கியுள்ளது.

நிதி ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்கள் அடிப்படையில் இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டு வந்தது.

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பான கோரிக்கை குறித்து, அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஆய்வு செய்து, 2012, மார்ச், 30ம் தேதி தன் அறிக்கையை அளித்தது.

அதில், சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு அடிப்படையான காரணிகள் எதுவும் இல்லாததால், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் நாடகம்

இது குறித்து, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

நிதீஷ் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் இனி மத்திய அரசில் கிடைக்கும் அதிகாரத்தின் பலனை அனுபவிக்கலாம். மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கும் அரசியல் நாடகத்தை தொடர்ந்து நடத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us